சீனாவின் சங்காய் மாகாணத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் பெண்ணொருவரை யாங் எனும் வாலிபர் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அதை அவதானித்த அப்பெண்ணின் காதலரான சாங், யாங்கின் பார்வை கோணத்தை அவாதானித்து அவர் தனது காதலியின் மார்பகத்தை தான் பார்க்கிறார் என்ற முடிவுக்கு வந்தவராய், யாங்கை நையப்புடைத்தார்.
திடீர் தாக்குதலால் மிரண்டு போன யாங், பின்னர் சுதாரித்துக்கொண்டவராய், பொலீசில் புகார் அளித்தார்.
பொலீஸ் விசாரணையின் போது மார்பகத்தை வெறித்து பார்த்ததால்தான் அடித்ததாக சாங் தெரிவிக்க, உடனே பதறிய யாங், நான் மார்பகத்தை பார்க்கல, அந்த பெண் பயன்படுத்திக்கொண்டிருந்த ஐ-பாட் ஐ தான் பார்த்ததாக தெரிவித்தார்.
யாங்கை அடித்த குற்றத்துக்காய் சாங், யாங்கிற்கு 300 யுவான்கள் தண்டம் செலுத்தும்படி ஆகியது.