ஜேர்மனிய அரசின் விபச்சார வரிவிதிப்பு கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜேர்மனியில் விபச்சாரம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நடைபெறுகிறது. ஆனால் அவர்கள் அரசுக்கு வரிகட்டுதல் வேண்டும்.
அவ்வாறு வரிகட்டுவதை இலகுவாக்க ஜேர்மனிய நகரங்களில் தானியங்கி முறையில் பணத்தை பெற்று அதற்கான டோக்கனை அளிக்கும் இயந்திரங்களை நிறுவ அரசு முடிவெடுத்துள்ளது.
முதற்கட்டமாக பாலியல் தொழிலாளர்கள் அதிகளவில் இனம்காணப்பட்ட ஃபோன் நகரில் முதலாவது இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
ஒரு விபச்சாரி ஒரு இரவு தொழிலை நடாத்த இயந்திரம் மூலம் 6 யூரோக்களை செலுத்தி டோக்கன் பெறவேண்டும். விபச்சாரத்தின் போது பொலீஸ் ரெய்ட்டில் அவ் டோக்கனை காட்டினால் ஓகே, டோக்கன் எடுக்காவிடின் 264 யூரோக்களை தண்டப்பணமாக செலுத்தவேண்டுமாம்...!!!