கவுண்டமணிக்கும் அஜித் ரசிகனுக்கும் இடைல ஒரு உரையாடல்

மங்காத்தா பார்க்க பிகரோட போய், பாதில அவள் என்ன கெட்ட வார்த்தைல ஏசிட்டு போக, ரிக்கட் காசு வீணாகக் கூடாது என்டு முழுக்க பார்த்து, வீட்ட வரேக்க வழில பரியாரிய பார்த்து "தலை"(யிடி) தைலம் காப்போத்தல் வாங்கிவந்த கதை தனிக்கதை.
அதுக்கிடைல அஜித் ஐயாவோட ரசிகன் ஒருவருக்கும், கவுண்டருக்கும் இடைல நடந்த கதை பேச்சை இப்ப கேழுங்கோ...

தல ரசிகன்: என்ன தல? மங்காத்தா பார்த்தாச்சா?

கவுண்டர்: டேய்.. பேன் மண்டையா.. என்ன எதுக்குடா தலன்னு திட்டுற? உங்க படத்த பார்த்துட்டுதான் விக்ஸ் தடவிட்டு இருக்கேன்

தல ரசிகன்: படம் தாறுமாறு தக்காளி சோறு இல்லை?

கவுண்டர்: ம்க்கும். எழவெடுத்த எலுமிச்சை சோறு. என் வாய கிளறாத. போயிடு.

தல ரசிகன்: 50வது படத்துல மசாலவே இல்லாம கெத்து ஸ்க்ரிப்ட் எடுத்திருக்காரு தல. உங்களுக்கு பொறுக்காதே!

கவுண்டர்: அட ராமா!! என்ன ஏன் இந்த கழிசடை பசங்க கூடலாம் சேர்த்து விடுற. முதல் சீனுல 10 பேர் கூட சண்டை போடுறாரு. அடுத்து பேரு போடுறாங்க. அப்புறம் ஓப்பனிங் சாங்க போடுறாங்க. இந்த கெரகமெல்லாம் முடிஞ்ச பிறகுதான் தியேட்டருக்கு போனியாடா நீ?

தல ரசிகன்: அத விடுங்கண்ணே.. இந்த மாதிரி இமேஜ் பார்க்காம சால்ட்&பெப்பர் ஹேர்ஸ்டைலோடு நடிக்க யாருக்காச்சும் தில்லு வருமா? ரஜினிக்கு அடுத்து தலதான்..

கவுண்டர்: அடேய் அடேய்.. அடடடேய்.. இதுக்கு முன்னாடி உங்க தலயோட தல சர்ஃப் எக்செல் போட்ட மாதிரின்னு தெரியுமாடா நாய உனக்கு? எங்க போனாலும் டை அடிச்ச தலையோடுதானே சுத்துனான்? இப்போ என்ன திடிர்ன்னு இமேஜ் மேரேஜ்ஜ்னு, போடா நாய, இல்லைன்னா கடிச்சு வச்சிடுவேன். சால்ட்டாம் பெப்பராம்.

தல ரசிகன்: அதில்லண்ணே. ஒரு மாஸ் ஹீரோ அப்படி நடிச்சா படம் ஓடும்ன்னு நம்பணும் இல்ல?

கவுண்டர்: அண்ணாமலைல பால்காரனாடா மாஸ்? அந்த கிழவன் ரஜினிதானே தூள் கிளப்புவாரு. படையப்பாலயும் அதானே? டைரடக்கர் ஜான் க்ளூனி தம்பி படத்த சுட்டிருக்காரு. உங்காளு அந்த ஹேர்ஸ்டைல லவட்டிட்டாரு. இதுக்கு இப்படி ஒரு ஹிஸ்டிரியாடா ஹிப்போபொட்டமாஸ் வாயா?

தல ரசிகன்: சரி விடுங்கண்ணே.. 50வது படத்துல முழுக்க முழுக்க நெகட்டிவ் கேரக்டர் பண்ணனும்ன்னு முடிவெடுத்தது பெரிய விஷயமில்லையா?

கவுண்டர்: எத்த திண்ணா பித்தம் தெளியும்ன்னு அவரும் போலீஸு, மார்ச்சுவரி பாய், கேங்லீடர், ஏன் ஸ்டூண்டண்ட்டா கூட நடிச்சு..ச்சீ ச்சீ.. நடந்து பார்த்துட்டாரு. எதையும் ஓட்டல நீங்க. மவனே செத்திங்கடான்னு இப்போ வில்லனா நடிக்கிறாரு. அதுக்கும் ரீலு ஓட்டுறீங்க பாருங்க. டேய் நாராயண இந்த கொசுத்தொல்லை தாங்கலடா

தல ரசிகன்: சரிண்ணே.. படத்த பத்தி பேசுவோம். செம ஸ்க்ரீன்ப்ளே இல்லை?

கவுண்டர்: டேய் நாதஸ்.. படம் ஆரம்பிச்சா சில லுச்சா பசங்க ஒவ்வொருத்தனா லேட்டா வருவான். இங்க என்னடான்னா ஸ்க்ரீன்ல ஒவ்வொரு சீன்லயும் புதுசு புதுசா வந்துக்கிட்டே இருக்காங்க. தல 50ன்னா நான் கூட அலிபாபா 40 திருடர்கள் மாதிரி தலயும் கூடவே 50 பேரும்ன்னு நினைச்சிட்டேன்.

தல ரசிகன்: ஆனா அவங்க எல்லோருமே கதைக்கு, செகண்ட் ஹாஃபுல தேவைதானே?

கவுண்டர்: அடங்கொன்னியா! அவனுங்க என்ன கமரக்கட்டையா திருடுறாங்க? 500 கோடிடா. இது எப்படி லட்சுமி ராய்க்கு தெரிஞ்சுது? அவள ஏன் கூட்டு சேர்த்தானுங்க? உங்களுக்கு பாட்டுல ஆட ஆள் இல்லைன்னா ஒரு பொண்ண சேர்த்துக்கிட்டு ஸ்க்ரீன்ப்ளேவாம். பேசாம போயிடு. இல்லன்னா மூஞ்சில ஆசிட்ட ஊத்திடுவேன்

தல ரசிகன்: என்னண்ணே!! த்ரிஷா, அஞ்சலி எல்லாம் நல்லா தானே இருக்காங்க?

கவுண்டர்: அடேய் எருமுட்டி வாயா.. நான் அவங்க நல்லா இல்லைன்னா சொல்றேன்? ஒரு பாட்டுல பாரு. அஞ்சலி வைபவ் கசமுசா. அதே பாட்டுல அர்ஜுன், ஆண்ட்ரியா கசமுசா. அதே பாட்டுல அஜித் த்ரிஷா கசமுசா. இப்போ இதுல யாருடா ஹீரோ? யாருடா ஹீரோயின்? மூணு பேத்துக்கும் பாவம் அந்த சரண் தம்பியே பாடித்தொலைக்குது.

தல ரசிகன்: இதுஒரு ஃபேமிலி படம்ன்னே. அவங்க எல்லாம் கல்யாணம் கட்டிக்கிட்டவங்க

கவுண்டர்: ஒரு ஃபேமிலியாடா? படத்துல மொத்தம் 99 ஃபேமிலி இருக்குடா.தலக்கு மட்டும்தான் இல்லை.

தல ரசிகன்: தல நடிப்பு சான்சே இல்லையில்ல? அதுவும் செஸ் போர்டு சீன்

கவுண்டர்: அடேய் வூடு மாறி பெருச்சாளி !உனக்கு வேலையில்லை. எனக்கும் வேலையில்லை. அந்த எழவுக்குத்தான் நான் படத்த பார்த்தேன். உன்கிட்ட பேசிட்டு இருக்கேன். அதுக்குன்னு இப்படியெல்லாம் பேசினா மவனே தலைல கல்ல போட்டு ஜெயிலுக்கு ராசா கூட களி திண்ண போயிடுவேன்

தல ரசிகன்: ஏண்ணே?

கவுண்டர்: சிரிக்கும்போது அழகா இருக்கான். அதுக்காக சிரிச்சிட்டே அவன் எது செஞ்சாலும் நடிப்பா? டேய் பாறாங்கால் வாயா.. உனக்கு ஒருத்தன பிடிக்குதுன்னா தப்பேயில்லை. ஆமாண்டா. நான் தல ரசிகன்னு போயிட்டே இரு. ஆனா அவன் நடிக்கிறான், படம் சூப்பர்ன்னு சொன்னேன் வை. கடல்ல தூக்கிப்போட்டு கைகழுவிடுவேன் ஜாக்கிரதை.

தல ரசிகன்: போங்கண்ணே.. நீங்க விஜய் ரசிகர் போலிருக்கு.

கவுண்டர்: அதானே பார்த்தேன். A காயுதே..இன்னும் B வரக்காணோமேன்னு. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடான்ன்னா.. கதையும் சுட்டுது.. கெட்டப்பும் சுட்டது. பாட்டும் சுட்டுது. அதுவும் மொக்கையா எடுத்திருக்கானுங்க. அத சொல்லுடான்னா நீங்க உஷா ஃபேன்தானே,.. வீடியோகான் கூலர்தானேனு.

தல ரசிகன்: அதுக்கே வறேன் தல. செகன்ட் ஹாஃபுல எத்தனை ட்விஸ்ட் பார்த்தீங்களா?

கவுண்டர்: அய்யோ அய்யோ.. டேய். கதைல ட்விஸ்ட்டுன்னா பார்க்கிறவன் சீட்டு நுனிக்கு வரணும். உங்க ட்விஸ்ட்ட பார்த்துட்டு அவனவன் தூங்கி எழுந்தா மாதிரி திமிரு முறுக்கிறானுங்க. உங்க ட்விஸ்ட்ட விட பார்க்கிறவன் உடம்புலதாண்டா நாய அதிக ட்விஸ்ட்

தல ரசிகன்: அப்போ அர்ஜுனும், அஜித்தும் கூட்டுன்னு முன்னாடியே தெரியுமா

கவுண்டர்: அடேய் சப்புற வாயா. சரோஜா படம் பார்க்கவேயில்லையா நீ? அதுல ஜெயராம்தான் அர்ஜூனாம். சம்பத்தான் அஜித்தாம்., இப்ப புரியுதா?

தல ரசிகன்: அட. ஆமாண்ணே

கவுண்டர்: அப்புறம் லட்சுமிராய் ட்விஸ்ட்டு, அவ ஸ்விம்மிங் பூல்ல திரும்பி நின்னு யோசிக்கும்போதே தெரியலயடா நாய, அவ வேற ஸ்கெட்ச் போடுறான்னு?

தல ரசிகன்: ம்ம். இப்பதானே புரியுது.

கவுண்டர்: இருடா இத்துப்போனவனே.. எங்க போனாலும் கோட்டு போடுவார் சரி. அந்த ட்ரக் அடில போய் ஸ்க்ரூவ கழட்டும்போது கூடவாடா கோட்டு போடுவாரு உங்க தல? அது வேற 10 MM ஸ்க்ரூவ 4 கழட்டுவாராம். உடனே கண்டெயினர் வண்டிய விட்டு தனியா வந்துடுமாம்.

தல ரசிகன்: போங்கன்ணே நீங்க பேசி பேசி என்னை யோசிக்க வைக்கறீங்க. எப்படி இருந்தாலும் படம் செம கலெக்‌ஷன். தெரியுமில்லை?தல தான் கிங் ஆஃப் ஓப்பனிங்.

கவுண்டர்: இங்க வாடா கண்ணா. நான் என்ன அஜித்துக்கு மாஸே இல்லைன்னா சொல்றேன்? இந்த கலகெஷன அசலுக்கும், ஏகனுக்கும் காட்ட வேண்டியதானே?5 நாள் வரிசையா லீவு. போதாதுக்கு புலிவேஷம்ன்னு டைட் காம்பிட்டேஷன். அள்ளிட்டீங்க.

தல ரசிகன்:இருந்தாலும் நாங்க இப்போ நம்பர் 3.சிவாஜி, தசாவாதாரம் அடுத்து மங்காத்தா. தல மாதிரி தில்லா ரசிகர் மன்றம் கலைச்சிட்டு இத செய்றது சாதாரண விஷயமா?

கவுண்டர்: இந்த டகால்ட்டி வேலை எல்லாம் நம்மக்கிட்ட வேணாம் மவனே.. படம் கலெக்‌ஷன் அள்ளுது. சரி. ஆனா பேருக்கு பின்னாடி பட்டம் வச்சுக்கிறது எல்லாம் வெட்டிவேலைன்னு சொன்னாரு. தல என்ன அவர் படிச்ச வாங்கன பட்டமா? அப்புறம், தியேட்டருல பேனரா வச்சு அடையாறு கிளை திருவான்மியூர் இலைன்னு வச்சிருக்காங்களே? அவங்களாம் யாராம்? உங்க தல சொன்னா கேட்க மாட்டாங்களா அவனுங்க?

தல ரசிகன்: விடுங்க தலைவா.படத்த பத்தி ஒரு வரில நச்சுன்னு சொல்லுங்க

கவுண்டர்: அதான் யாரோ ஒருத்தர் சொன்னாரே.. தண்ணி.. தம்மு.. கன்னு. பொண்ணு

தல ரசிகன்: அவ்ளோதானா?

கவுண்டர்: இன்னும் ஒரு வார்த்தைல கூட சொல்லுவேன். என்னை கெட்ட வார்த்தை பேச வச்சிடாத

தல ரசிகன்: என்ன ஆனாலும் தல நல்ல மனுஷன். நான் எப்பவும் அவர் ஃபேன்தான்.

கவுண்டர்: அடேய் சாக்ரடீஸ்.. இத்தனை நாளா இதான செஞ்சீங்க? தலையை பத்தி பேசுவீங்க. அவர் படத்த பத்தி பேச மாட்டீங்க. இனியும் இதையே கண்டினியூ பண்ணா நான் ஏன் பேசப்போறேன். தல? நல்லவர். தலைக்கு டை அடிக்காதாவரு. வாட்ச்மேன கூட சார்ன்னு தான் கூப்பிடுவாரு. நல்லா வண்டி ஓட்டுவாரு. இப்படியே சொல்லிட்டு இருங்க. அத விட்டு படம் சூப்பர்ன்னு வாய தொறந்த, பல்லிய புடிச்சு வாயில போட்டுடுவேன் சொல்லிட்டேன்.





நன்றி: பிரகாஸ்