காதலுக்காக நடக்கும் காதல் மன்னன்

காதலுக்காக 1000 மைல்கள் தூரத்தை நடந்து கடக்கத் துணிந்துவிட்டார் இந்த காதல் மன்னன்.


சீனாவை சேர்ந்த லியூ பிவின் எனும் 29 வயது ஆண் ஒருவர், 23 வயதாகும் லிங் சூ எனும் பெண்ணை தீவிரமாக காதலித்தார். அவரது காதலை அவளிடம் சொல்லியபோது, அவள் விளையாட்டாக, '1000 மைல்கள் கால்நடையாக வந்து என்னிடம் காதலை சொன்னால் ஏற்றுக்கொல்கிறேன்' என்றாள்.

உடனே காரியத்தில் இறங்கிவிட்டார் லியூ பிவின், காதலி இருக்கும் தென்கிழக்கு சீனாவில் இருந்து அண்ணளவாக 1000 மைல் தொலைவில் இருக்கும் குவாங்டொங் மாகாணத்தில் இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கிவிட்டார்.

தற்பொழுது 500 மைல்களுக்கு மேல் தாண்டிய நிலையில், தனது முயற்சியில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்.




காதல் வாழ்க...!!!