உலகிலேயே பெரிய பர்கர் - கின்னஸ் சாதனை

உலகிலேயே பெரிய பர்கர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற அலமெடா கண்காட்சியின் போதே இவ் உலக சாதனை பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஊருக்கே பகிர்ந்தளிக்கலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் இவ் பர்கரின் நிறை சுமார் 352 கிலோகிராம்கள்...!!!

பிரிட் என்றைட், கிரில், நிக் நிகோரா ஆகிய மூவரின் கடின முயற்சியால் சமைக்கப்பட்ட இவ் பர்கரை வேகவைப்பதற்கு சுமார் 15 மணிநேரம் எடுத்ததாம்.