ஒரு கால் வளம் மாறிய நிலையில் உடலளவிலும், மனதளவிலும் துவண்டு போயிருந்த சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தான் இந்த டுகன் ஸ்மித். எலும்புப் புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் ஒரு கால் சூம்பலடைந்து மறு வளமாக திரும்பிப்போனது.
பேஸ்போல் விளையாட்டு வீரனாக வேண்டும் என்ற அவனது கனவும் பொய்த்துப்போனது.
இந் நிலையில் அவனது பெற்றோர்கள் அவனை ஒகியோ ஸ்ரேட் யூனிவேர்சிட்டியின் புற்று நோய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே டாக்டர் ஜோன் மஜிர்சொன் த்லைமையிலான வைத்தியர் குழு அறுவைச் சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட அவனது காலை அகற்றி விசேடமாக தயாரிக்கப்பட்ட செயற்கைக் காலை பூட்டினர்.
சில நாட்களிளேயே வழமைக்கு திரும்பிய சிறுவன் இப்பொழுது பேஸ்போல் விளையாட்டிலும் கலக்கி வருகிறான்.






