உல்லாச தீவாக ஓர் கப்பல்


Tropical Island Paradise Super Yacht எனப் பெயரிடப்பட்ட இவ் உல்லாசக்கப்பல் ஓர் அழகிய தீவைப்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 90 மீற்றர்கள் நீளமான இக் கப்பலில் ஓர் நட்சத்திர விடுதியின் தரத்தில் சேவை வழங்கப்படவுள்ளது.


செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மலையில் இருந்து வரும் அருவி, அது வந்து சேருமிடத்தில் ஓர் அழகிய நீச்சல் தடாகம் என சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் 10 சிறிய குடில்களும் அமைக்கப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது.


கடல் நடுவே தரித்திருக்கையில் பிரத்தியோக வாயில் வழியாக வெளியே வந்து கடலின் மேலே மது அருந்தும் வசதியும் உள்ளது.



இக்கப்பலில் பயணிப்பவர் மனங்களில் இப்பயணம் என்றும் இனிமையாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.