எட்னா எரிமலை வெடித்து சிதறியது

தெற்கு இத்தாலியின் Sicily தீவில் உள்ள பிரபல்யமான எரிமலை எட்னா வெடித்து சிதறியது. 250 மீற்றர் உயரத்துக்கு லாவா தீக்குழம்பு சீறிப் பாய்கிறது.


வார ஆரம்பத்தில் சீற்றம் கொண்ட எட்னா நேற்றைய தினம் வீறு கொண்டு வெடித்து புகை மண்டலம் பல மீற்றர் தொலைவுக்கு சூழ்ந்து கொண்டுள்ளது.

இதனால் தெற்கு இத்தாலியில் உள்ள Catania விமான நிலையத்தினூடான விமானங்களின் பயணங்கள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காற்று வேகமாக வீசிவருவதால் விரைவில் புகைமண்டலம் நீங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக நிபுணத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.