விளையாட்டு வினையானது விரல்கள் பறிபோனது

அமெரிக்க புளோரிடா மாகாணத்தில் விளையாட்டு வினையானதால் பெண்ணின் மூன்று விரல்கள் பறிபோயுள்ளது.
புலோரிடா பல்கலைக்கழக மாணவியான கய்னிஸ்வில்லி தனது காதலனை பட்டாசு வெடித்து நித்திரையிலிருந்து எழுப்ப முயன்றபோது, பட்டாசு கைகளிளேயே வெடித்தது.

முதல் நாள் இரவு மதுபோதையில் உறங்கப்போன காதலனை பயமுறுத்தி எழும்ப வைக்க முயன்றபோதே இவ் அசம்பாவித சமவம் இடம்பெற்றுள்ளது.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும் மூன்று விரல்கள் மோசமாக சிதைவடைந்த நிலையில் அவற்றை அகற்றவேண்டி ஏற்பட்டது.