WIMM ஆய்வகத்தின் கண்டுபிடிப்பாய் இவ் வருட இறுதியில் சந்தையில் வர இருப்பது தான் இந்த WIMM wearable Computer.
இதற்கென பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட wearable Platform இல் விசேட மென்பொருள் பொதிகளுடன் அறிமுகமாக இருக்கிறது.
160 X 160 பிக்சல் வர்ணத் தொடுதிரை, WiFi, Bluetooth என பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இது முழுமையான Water Proof சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தையில் விலை தீர்மானிக்கப்படாத நிலையில் இதன் விலை 200$ முதல் 2000$ வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPod Nano ஐ போல் உருவத்தில் ஒத்திருக்கும் இது, வருங்கால சந்தையை ஆக்கிரமிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.