மலவாசல் இல்லாமல் குழந்தை

இந்தோனேசியா வில் அப்துல் ரோஹிம் மற்றும் அவரது மனைவி நிநிங் என்போருக்கு மலவாசல் இல்லாமல் குழந்தை பிறந்துள்ளது.



வெட்கத்தில் இதைப்பற்றி வெளியே கூற அஞ்சிய பெற்றோர் சிகிச்சைக்காக குழந்தையை டஞ்சிராங் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.www.tamilamazing.com



அங்கே குறித்த அறுவைச் சிகிச்சைக்கு வேண்டிய உபகரணங்கள் இல்லாத நிலையில் இவ் விடயம் ஊடகங்களில் வெளிவந்தது.

தற்போது அவர்கள் தமது குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு தேவையான நிதியை திரட்ட சமூக ஆர்வலர்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இந் நிலையில் ஜகார்தாவில் உள்ள  சிப்டோ மன்குன்குஸ்கோ பொது மருத்துவமனையில் விசேட அறுவைச்சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.