நேற்றைய தினம் மாலை (02/08) வெள்ளை மாளிகை வெளிச்சுவரை தாண்டி உள்ளே குதித்தவரை பொலீசார் கைது செய்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் அவர்மீது அனுமதியின்றி வெள்ளை மாளிகையில் புகுந்தமை, வெள்ளை மாளிகையின் அமைதியான சூழலுக்கு பங்கம் விளைவித்தமை போன்றவற்றிற்கு குற்றம் சுமத்தப்பட்டு அவர் அவ்வாறு புகுந்தமைக்கான காரணத்தை அறிவதற்காக மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையின் போது அவர் வீடு அற்றவர் எனத் தெரிய வந்தள்ளது.