Wu Zhilong சீனாவை சேர்ந்த 20 வயது வாலிபர் ஆவார். இவர் தனது வயிற்றுத் தசைகளின் மூலம் 12 பேருடன் சேர்த்து காரை இழுத்து சாதனை புரிந்துள்ளார்.
இறப்பர் அரைக்கோள உதவியுடன் காரை தனது வயிற்றுத்தசைகளில் மட்டும் இணைத்து கார், 12 பேர் உள்ளடங்கலாக சுமார் 2200 கிலோ கிராம்கள் (2.2 தொன்) நிறையை 20 மீற்றர் வரை இழுத்துள்ளார்.
தனக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பது கனவு எனவும், அதற்கான முயற்சிகளிலேயே தான் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.