யப்பானிய தீம் பார்க் ஒன்றில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிறீம் தயாரிக்கும் ரோபோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
யஸ்காவா-குன் என பெயரிடப்பட்ட இவ் ரோபோ டோக்கியோவில் SummerLand தீம் பார்க்கில் காணப்படுகிறது.
தொடுதிரை மூலம் நமக்கு வேண்டிய ஐஸ்கிறீமின் அளவு, சுவை போன்ற தகவல்களை அளித்து கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்திவிட்டால் போதும், சிறிது நேரத்திலேயே ஐஸ்கிறீமை உருவாக்கி தந்துவிடுகிறது.