சிறுமி மீது சிறுநீர் கழித்தவர் கைது

விமானத்தில் சிறுமி மீது சிறுநீர் கழித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.


பொர்ட்லான்ட் இல் இருந்து பயணத்தை ஆரம்பித்த ஜெட்புளு பயணிகள் சேவை விமானத்தில் ரொபெர்ட் விட்சி என்ற 18 வயது இளைஞர், அருகில் உள்ள ஆசனத்தில் உறங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுமி மீது சிறுநீர் கழித்தார்.

சிறுமியின் பெற்றோர் விமான ஊழியர்களுக்கு முறைப்பாடு தெரிவிக்க, அவ் இளைஞன் விமான நிலைய பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

விசாரணையின் போது தான் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் தன்னை அறியாமல் சிறுமி மீது சிறுநீர் கழித்துவிட்டதாக தெரிவித்தான்.