எய்ட்ஸ் தொற்று ஊசி தான் பாதுகாவலன்!!!

எய்ட்ஸ் தொற்றுடைய ஊசிகளை வைத்து திருடர்களை பயப்படுத்துகிறார் ஓர் டாக்டர்.

பிறேசில் நாட்டில் சோபிறாடின்கோ நகரை சேர்ந்த பெண் வைத்தியர் தனது வீட்டு சுவரில் வரிசையாக எய்ட்ஸ் தொற்றுடைய குருதி தோய்க்கப்பட்ட ஊசிகளை அடுக்கி வைத்து திருடர்களிடம் இருந்து பாதுகாப்பு பெற்றுள்ளார்.

அதற்கான எச்சரிக்கை அறிவிப்பையும் சுவரில் மாட்டி வைத்துள்ளார்.


இவர் வீட்டுக்கு அடிக்கடை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் திருடர்கள் இவரின் லப்டொப், கமெரா, அழகுசாதனப் பொருட்களை திருடி வந்ததால் கடுப்படைந்த அவர் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார்.