எலியில் இருந்தே மனிதன் தோன்றினான் - ஆய்வு முடிவு

புதைபொருள் மீது நடாத்தப்பட்ட ஆய்வின் மூலம் மனிதன் ரோடென்ட் எனப்படும் பண்டைய எலி இனத்தில் இருந்து பரிணமித்ததாக நம்பகமான முடிவு கிடைத்துள்ளது.


சீனாவில் மேற்கொள்ளப்பட்ட புதைபொருள் ஆராட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 160 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாக கருதப்படும் எலி போன்ற ரோடென்ட் எனும் விலங்கின எச்சத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அது மனிதனின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப கட்டமாக இருந்திருக்கலாம் என்று அறியப்பட்டுள்ளது.


அதன் எலும்பு கட்டமைப்பு, முக்கியமாக அதன் பற்கட்டமைப்பு வெட்டும் பல், வேட்டைப்பல், கடைவாய் பல் என மனிதனின் கட்டமைப்பை மிகவும் ஒத்திருக்கிறது.