உலக கார் தொகை ஒரு பில்லியனை தொட்டது

உலகம் முழுவதிலும் பதிவு செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை தொட்டுவிட்டது.


இவ் உத்தியோகபூர்வ அறிக்கயின் பிரகாரம் உலக சனத்தொகையில் ஏழு பேருக்கு ஒரு கார் என்ற விகித்தத்தில் கார்களின் செறிவு காணப்படுகிறது.

கார் பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இது பாரிய அளவில் சூழல் மாசடைவுக்கும், பெற்றோலிய தட்டுப்பாட்டுக்கும் உலகை இட்டுச்செல்லும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.