டேனியல் ரிகார்டோ வின் நம்பிக்கை

கிராண்ட் பிறீஸ் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் பங்கேற்க, தனது திறனை மேலும் மேம்படுத்தி வருவதாக இளம் வீரர் டேனியல் ரிகார்டோ தெரிவித்தார்.
இந்த 22 வயது வீரர்  டேனியல் ரிகார்டோ வெப்பருக்கு பதிலாக, ரெட்டில் இடம் பெறலாம் என பேசப்பட்டு வருகிறது. ரெட்டில் இளம் வீரர்கள் பயிற்சித் திட்டத்தில் உருவானவர் டேனியல் ரிகார்டோ ஆவார்.
தனது அணி வீரர் விடான் டோனியோ லியுசி அளவிற்கு திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என டேனியல் ரிகார்டோ தெரிவித்தார். ரெட்டில் அணிக்காக பந்தயத்தில் செல்வது மிகச் சிறந்த விடயம் ஆனால் அந்த வாய்ப்பு தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
டேனியல், தற்போது ரெட்டில் சகோதர அணியான டோரோ ரோகோவில் காத்திருப்பு ஓட்டுனராக உள்ளார். அந்த அணியில் அவர் முக்கிய வீரராக இடம் பெறலாம் என கூறப்படுகிறது.