மூன்று பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் நான்காவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் மூன்று பெண்களுக்கு தந்தையான கோட்டா வில் வசிக்கும் ரஞ்சித் எனும் 30 வயது நபர் தனது மனைவியை நான்காவது குழந்தையின் பிரசவத்துக்கு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.
நான்காவது குழந்தையும் பெண் குழந்தை என்று கேள்விப்பட்ட ரஞ்சித் மனவிரக்தியடைந்த நிலையில் கோட்டாவின் சம்பல் நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
மறுநாள் சடலம் கரையொதுங்கியதை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சீதனக் கொடுமை காரணமாக பெண் குழந்தைகளை வெறுக்கும் நிலைமை தொடர்ந்து செல்கிறது.
சீதனத்தை வைத்து வாழ்க்கையில் செட்டில் ஆவதை இலட்சியமாகக் கொண்ட இளைஞர் கூட்டமும் வளர்ந்து வருவது கவலைக்குரிய விடயமாகும்.