தூக்கிலிருந்து காப்பாற்ற முயற்சி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை காப்பாற்ற சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடி வரும் வழக்கறிஞர் புகழேந்தி, இந்த தண்டனைக்கு எதிரான தடைக் கோரிக்கை மனுவுடன் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்தும் திங்கட் கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மூவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை நிறுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.