சலவை இயந்திரத்துள் அகப்பட்ட குட்டிப் பூனை

பிருத்தானியாவில் துரதிர்ஸ்டவசமாக சலவை இயந்திரத்தினுள் சிக்கிக்கொண்ட பூனை அதிர்ஸ்டவசமாக 50 நிமிடங்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.



சுசன் கோர்டொன் என்ற பெண் தெருவில் அநாதரவாக நின்ற பூனையை எடுத்து பிறின்சஸ் என் பெயரிட்டு பராமரித்து வந்திருக்கிறார்.

சம்பவ தினத்திற்கு முதல் நாள் இரவு தோய்ப்பதற்காக இயந்திரத்தினுள் உடுப்புக்கள் போடப்பட்ட நிலையில் இயந்திர கதவு திறந்த நிலையில் இருந்திருக்கிறது. அதற்குள் பிறின்சஸ் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறது.

இதை அறியாத சுசன் சலவை இயந்திரத்தை இயக்கிவிட்டிருக்கிறார். சுமார் 50 நிமிடங்களுக்கு பிறகு எதேற்சையாக இயந்திரத்தை பார்த்தவர் அங்கே ஆடைகளுடன் பூனையும் தோய்க்கப்பட்டுக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் பூனையை மீட்டு கிங்ஸ்வெல் விலங்கியல் மருத்துவமனையில் அனுமதித்தார். இரண்டு நாள் தீவிர சிகிச்சையின் பின்னர் பிறின்சஸ் தற்பொழுது பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறது.

சுசன் தனது பூனையுடன்