லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் பிரிவுத்தலைவர், டாக்டர். டான்மாய் சர்மா, ‘கண்டதும் காதல்’ குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். 18 வயதிலிருந்து 50வது வரையிலான 80பேர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். பலவித உணர்ச்சிகளை Magnatic Resonance Imagine Scan மூலம் ஆய்வு செய்தார். அப்போது தாபத்துடன் காதல் பார்வை பார்த்த ஒரு ஜோடியின் உணர்ச்சிகள், உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் உணர்ச்சிகள், விபத்து, உயிரற்ற சடலங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் என்று பலவகை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆராய்ச்சிகள் மூலம் ஒரு பெண்ணைக் கண்டதும் ஆணின் மனதில் காமத்திற்குத் தான் முதலிடம் என்றும் பிறகுதான் காதல் என்றும் தெரிய வந்தது. மேலும் காதல் என்பதும் செக்ஸ் உணர்வுகளும் மூளையின் பல பகுதிகளைத் தூண்டி அன்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. மூளையில் இவ்வுணர்ச்சிகளைத் தூண்டும் பகுதிகளுக்கு அதிகமானளவு ஆக்ஸிஜனையும் ரத்தத்தையும் எடுத்துச் செல்ல இவ்வுணர்ச்சிகளே காரணமாக அமைகின்றன.
ஆட்டய போடுற எண்ணம்தான் காதலாய் மாறுகிறது... ஹி...ஹி..... உலகத்தில அத்தனை பேரும் நம்மள மாதிரிதான் இருக்கிறானுவ....
இந்த ஆராட்சி முடிவு 100% சரியா என்று தெரியவில்லை. ஆனால்...
இளமை சந்தையில் விலைபோகாத சரக்குகளும், மாற்றான் பணத்தில் செட்டிலாக நினைக்கும் வெக்கம் கெட்டவர்களும் தான் திருமணம் பேசி மணம் முடித்துக்கொள்கிறார்கள் என்பது மட்டும் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.