கூகுலின் அதிரடி சாதனை - இனி எல்லோரும் சுகவாசி தான்

நாள்தோறும் சாதனைகள் பல புரியும் கூகுல் புதிதாக அதிரடி சாதனையை ஒன்றை புரிந்துள்ளது.

உலகிலேயே அதிவேக இணைய இணைப்பை உருவாக்கி வெற்றிகண்டுள்ளது. அதன் வேகம் வினாடிக்கு ஒரு கிகா பைட் (1 GB).

தரவிறக்க வேகம் 300 MB/s, பதிவேற்றல் வேகம் 125MB/s. தற்போது பலோ ஆல்டொ, கலிபோர்னியா, ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழக வளாகம் என்பவற்றில் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

பரிசோதனையின் போது 95MB அளவுள்ள கோப்பை, வெறும் 9 செக்கன்களில் பதிவிறக்கி சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

வெகு விரைவில் கூகுல் தனது 'கூகுல் பைபர்' என பெயரிடப்பட்டுள்ள இக் கண்டுபிடிப்பை உலகமெங்கும் விரிவுபடுத்தவுள்ளது.

இனி இணைய பாவனையாளர்கள் எல்லோரும் சுகவாசியாவார்கள் என நம்பலாம்.