இவ்வாறு சிலர் இருப்பதால் தான் மழை பெய்கிறது என்று சொல்வார்களே, அது போன்றவர் தான் அமெரிக்காவின் பொஸ்டொன் பகுதியை சேர்ந்த டேவ்ஃபீனி எனும் நபர்.
இவரது நாயான லக்கி, காருடன் சந்தித்த விபத்தில் தனது காலை இழந்து நடக்கமுடியாமல் போனது.
இதனால் கவலையடைந்த டேவ்ஃபீனி அந்த நாய்க்காக விசேட சக்கர நாற்காலி ஒன்றை அமைத்துக்கொடுத்து, அதனை நடக்க வைத்துள்ளார்.
இது பற்றி கருத்து தெரிவிக்கையில், எனது நாய் சக்கர நாற்காலி உதவியுடன் முதன்முதலில் நடக்கத்தொடங்கியபோது, அது தன்னை பார்த்த பார்வை தன்னால் இன்றும் மறக்கமுடியாமல் இருப்பதாக கூறினார்.