சீனாவை சேர்ந்த யூ சின்குன் எனும் 33 வயது மனிதரே உலகிலேயே அதிகளவு உரோமங்களை கொண்ட மனிதராவார். இவரது உடலில் 96 வீதத்துக்கு உரோமம் மண்டிக் கிடக்கிறது.
இவர் உலகிலேயே அதிகளவு உரோமம் உடைய நபரென 2002 ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரு வருடங்களாளாக இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பெண்ணின் பெற்றோரின் எதிர்ப்பால் இவர் தனது காதலியை பிரியவேண்டியேற்பட்டது.
இந் நிலையில் இவர் திருமணத்துக்கு பெண் தேடுகிறார்.
ஒருமுறை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அங்கு பணியாற்றிய தாதியர்களின் பழக்கவழக்கங்கள் பிடித்துப்போகவே, தான் ஓர் தாதியையே மனைவியாக்கிக் கொள்ளப்போவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.