பூஜா பேடியின் காமசூத்ரா விளம்பரம் - வீடியோ இணைப்பில்

20 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய காமசூத்ரா விளம்பரம் 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது.


இதையடுத்து நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதில் நடித்த பூஜா பேடியும், மார்க் ராபின்சனும் கெளரவிக்கப்பட்டனர்.1991ல் வெளியான முதல் காமசூத்ரா ஆணுறை விளம்பரம் இது. இதில் அப்போது செக்ஸியான நடிகையாகவும், மாடலாகவும் அறியப்பட்ட பூஜா பேடி அந்த விளம்பரத்தில் படு கவர்ச்சிகரமாக நடித்திருந்தார். அவருடன் சூப்பர் மாடல் மார்க் ராபின்சனும் நடித்திருந்தார்.

 இந்த விளம்பரம் அப்போது பெரும் எதிர்ப்புகளை சம்பாதித்தது. இருப்பினும் மிகவும் பிரபலமானது. காமசூத்ரா ஆணுறைக்கும் பெரும் வியாபார பலன்களைத் தேடிக் கொடுத்தது.இந்த விளம்பரம் உருவாகி வெளியாகி 20 ஆண்டுகள் ஆகி விட்டன. இதையடுத்து மும்பை அருகே ஒரு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பூஜா பேடியும், மார்க் ராபின்சனும் கெளரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்தார் பூஜா பேடி.அவர் பேசுகையில், இந்த விளம்பரத்தை கோவாவில் படமாக்கினோம். விளம்பரத்திற்காக நான் ஒப்பந்தமானபோது, நான் ஒரு ஷவரின் கீழ் குளிப்பதாகவும், மார்க் ராபின்சன் படகில் இருப்பது போலவும் காட்சி என்று கூறியிருந்தனர்.

அதுவரை எல்லாம் நன்றாகவே இருந்தது.நான் படப்பிடிப்புக்குப் போனபோது, அங்கு ஸ்டுடியோவில் மார்க் இருப்பதைப் பார்த்தேன். படகில்தானே நீங்கள் இருக்க வேண்டும், இங்கு என்ன செய்கிறீர்கள் என்று நான் கேட்டேன். பிறகுதான் எனக்குத் தெரிந்தது, அவர் உடல் மீது கை ஷவரை நான் படர விட வேண்டும் என்றும், பின்னர் பின்புறத்தைப் பிடித்து அழுத்த என்றும் காட்சி இருப்பதாக.இதை எனக்கு முன்பே சொல்லவில்லை. எனவே என்னால் நடிக்க முடியாது என்று கூறினேன். அதன் பிறகு வேறு மாதிரி அந்தக் காட்சியைப் படமாக்கினர். மார்க்கின் பின்புறத்தை எனது மேக்கப் கலைஞர் ஒருவரை வைத்து அழுத்த வைத்து படமாக்கினர்.

ஆனால் அது எனது கை போலவே தெரியும். ஆனால் உண்மையில் நான் அதை செய்யவில்லை என்றார் பூஜா பேடி சிரித்தபடி.மேலும் அவர் கூறுகையில், அந்த விளம்பரத்தில் நான் மார்க்கைத் தொடாமல்தான் நடித்தேன். இருப்பினும் பின்னர் இருவரும் சேர்ந்து நடித்த பல விளம்பரங்களில் தொட்டு நடித்துள்ளேன் என்றார்.இதுகுறித்து மார்க் கூறுகையில், எப்படியோ யாராவது என்னைத் தொட்டால் சரி என்று நானும் விட்டு விட்டேன் என்று கூற கூடியிருந்தோர் மத்தியில் சிரிப்பலை வெடித்துக் கிளம்பியது. ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த காமசூத்ரா விளம்பரம் இந்திய விளம்பர உலகில் பெரும் திருப்புமுனையைக் கொடுத்த ஒன்றாகும்.