உலகை ஓர் அறைக்குள் சுருக்கியது இந்த WWW தான். 1991 ஆகஸ்ட் 06 இல் டிம் பேர்னெர்ஸ்-லீ (தற்பொழுது சேர் பட்டம் பெற்றுள்ளார்) என்பவரால் கைபர்டெக்ஸ் செய்திக் குழுமத்துக்காய் ஆரம்பிக்கப்பட்ட திட்டமே இந்த WWW(World Wide Web) ஆகும்.
'எந்தத் தகவலும் எந்த இடத்திலும்' என்ற கருப்பொருளோடு டிம் பேர்னெர்ஸ்-லீ ஆல் 20 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் இன்று உலகில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது.