CO2 ஐ சுவாசிக்கும் செயற்கை மரங்கள்

இயற்கை மரங்களைப் போல சூழல் சுற்றோட்டத்தை காட்டக்கூடிய செயற்கை மரங்களை ஆராட்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இயற்கையான மரங்கள் காபனீரொக்சைட்டை தமது சுவாசத்துக்கு பயன்படுத்துவதால், சூழலில் காபனீரொக்சைட்டின் செறிவு கட்டுக்குள் பேணப்படுகிறது.

சனத்தொகைப் பெருக்கம் காரணமாக மரங்களை அழிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில் இவ்வாறான செயற்கை மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை சூழல் பாதுகாப்பு தொடர்பில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இவை சூரிய சக்தியை பயன்படுத்தி காபனீரொக்சைடின் அளவை கட்டுப்படுத்திகின்றன.