நெதர்லாந்தில் பண மழை - படங்கள், வீடியோ

நெதர்லாந்தில் வீதியால் பரிமாற்றத்துக்காக பணம் கொண்டு செல்கையில் ஏற்பட்ட தவறு காரணமாக பணம் மழையாக பொழிந்தது.

நெதர்லாந்தில் தெற்கு லிம்பெர்க் மாகாணத்தில் எல்ஸ்லூ நகரில் உள்ள பெருந்தெரு ஒன்றால் பாரிய கொன்டெய்னர் லொறி மூலம் யூரோ நாணய தாள்கள் பரிமாற்றத்துக்காக கொண்டுசெல்லப்பட்டது.

அதன்போது தவறுதலாக கொன்டெய்னரின் கதவு திறந்து கொள்ள, உள்ளிருந்த பணம் காற்றில் கிழம்பி, தெருவில் மழைபோல் பொழிந்தது.

வீதியால் சென்றுகொண்டிருந்தவர்கள் அப்படி அப்படியே வாகனங்களை நிறுத்திவிட்டு பணம் பொறுக்குவதில் மும்முரமானார்கள்.

தெரு முழுவதும் பணம் இறைத்து காணப்பட்டது.

10,20 மற்றும் 50 யூரோ நாணய தாள்களே இவ்வாறு வீணாக்கப்பட்டன.

இது பற்றி அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியொருவர் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில், மேற்படி தொலைந்து போன நாணயங்கள் செல்லுபடியற்றனவாக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.