- மட்டன் – 1 கிலோ
- சின்ன வெங்காயம் – 100 கிராம்
- பூண்டு - 5 -8 பல்
- இஞ்சி – 1 துண்டு
- பட்டை – 2
- கிராம்பு – 2
- சீரகம் – 1 /2 தேக்கரண்டி
- சோம்பு – 1 /2 தேக்கரண்டி
- மிளகு – 1 /4 தேக்கரண்டி
- மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1 /2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி - 2 (வெட்டியது)
செய்முறை
- மட்டனை கழுவி, நடுத்தரமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு,சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, மல்லி, மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த மசாலாவை மட்டன் துண்டுகள் மீது தடவி, 30 நிமிடங்கள் வைக்கவும்.
- குக்கரில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
- மசாலா தடவி வைத்துள்ள மட்டன் துண்டுகளைச் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விடவும்.
- கடையில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பின் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு மாசியும் வரை வதக்கவும்.
- வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளைச் சேர்த்து , எண்ணெய் பிரியும் வதக்கி இறக்கவும்.