இணைய ஜாம்பவானான கூகுல் பிரபல மொபைல் நிறுவனமான மோடோரோலாவை 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
கூகுலின் அன்றியோட் இயங்குதளத்தை பயன்படுத்தி மொபைல் போன், டப்லெட் கணினிகள் செய்வதில் முன்னோடியாக திகழ்ந்த மோடோரோலா தற்பொழுது கூகுல் வசமாகியுள்ளது.
ஸ்கைப்பை மைக்ரோசொப்ட் பாரிய தொகைக்கு வாங்கியதற்கு அடுத்த கட்ட பாரிய நிறுவனக் கொள்வனவாக இது பேசப்படுகிறது.
கூகுலினால் மெருகூட்டப்படப் போகும் மோடோரோலா தயாரிப்புக்கள் வருங்கால சந்தையில் அப்பிள், நொக்கியா போன்ற முன்னனி நிறுவனங்களுக்கு சவாலாக விளங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.