உலகின் விலை உயர்ந்த ஷேவிங் ரேசர்

உலகிலேயே விலை உயர்ந்ததாக கருதப்படும் சேவிங் ரேசரை அமெரிக்காவின் ப்ரைட் லைட் வென்ரூரிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


இதில், இதன் சவர அலகுகள் 99.9% இரிடியம் கலந்த ஷஃபிரோ இரிடியம் எனும் கலப்புலோகத்தால் ஆக்கப்பட்டுள்ளன. இரிடியம் பெறுமதி மிக்க உலோகமாகும், இது உக்ரேன் நாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது. அத்தோடு ரேசரின் உடல் பிலாட்டினத்தால் ஆக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களகும். ($100000).

ஆயுள் காலத்துக்கும் இவ் ரேசருக்கான பராமரிப்பு பொறுப்பை அந் நிறுவனமே ஏற்றுக்கொள்ளுமாம்.

இவ் ரேசரை தயாரிக்க 3 வருடங்கள் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.