பெர்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 39 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் பகல் தூக்கத்தினால் மூளை செயல்பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 39 பேரை இரவு நேரத்தில் நன்றாக தூங்கவைத்து பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்கவைத்தனர்.
அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90
நிமிடம் மட்டும் சிறிய அளவில் உறங்கவைத்தனர். இவர்களின் செயல்திறன் பின்னர்
பரிசோதிக்கப்பட்டது. இதில், இரவில் மட்டுமே தூங்கியவர்களை விட, பகலில்
சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளைசெயல்பாட்டு திறன் அதிகரித்து
காணப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதே
முடிவுதான் கிடைத்தது. இதயத்தை காக்கும் பகல் நேரத்தில் தூங்குவது
இதயத்துக்கு நல்லது என்றும் சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
பென்சில்வேனியா
நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றும் ரியான் பிரின்டில், சாரா
காங்கிளின் ஆகியோர் 85 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இதனை
கண்டறிந்துள்ளனர். மாணவர்களில் ஒரு பாதியினரை பகலில் ஒரு மணிநேரம்
தூங்கும்படியும், இன்னொரு பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும்படியும்
செய்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணிநேரம்
தூங்கினால் ரத்தம் அழுத்தம் குறைவது கண்டறியப்பட்டது.
இதன்
மூலம் பகலில் தூங்குவதன் மூலம் இதயநோய் தாக்குவது தடுக்கப்படுகிறது என்பது
இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அரை மணி நேரத் தூக்கம், ஒரு மணி நேரம்,
இரண்டு மணி நேரம் என நீடித்தால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு
அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.