சீப்பால் தலைவாரினால் மரணம்

சீப்பால் தலை வாரினால் இந்தப் பெண் இறந்துவிடுவார்! நம்ப முடிகிறதா?? உண்மை தான்.


ஸ்கொட்லாந்தை சேர்ந்த மெகன் ஸ்வாத் எனும் பெண்ணே இவ்வாறான விநோத நோய்க்கு ஆளாகியுள்ளார்.

இவர் 2008 ம் ஆண்டு இவரது 13 வது வயதில் ஒருநாள் இவருக்கு முதன் முறையாக நோயின் அறிகுறி தெரியவந்தது.

பாடசாலை செல்வதற்காக இவரது தாயார் இவருக்கு தலை வாரிவிட்டபோது, இவர் திடீரென மயக்கம்போட்டு விழுந்தார், உதடுகள் நீலமாக தொடங்கின.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, இவர் குறிப்பிட்ட நோய்க்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இந் நோய்பற்றி நிபுணர்கள் தெரிவிக்கையில், தலைமுடியோடு சீப்பின் பற்கள் உரசும் போது தூண்டப்படும் சிறு மின்னேற்றம் இவரது முளையை செயலிழக்க வைப்பதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து தலை சீவுவாரானால் மரணம் சம்பவிக்கக்கூடுமென நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.