சிறுவர்களை மகிழ்விக்க கற்பனையில் உருவாக்கப்பட்டதே தேவதை கதாபாத்திரம். இன்று தேவதை சடலமாக மிட்கப்பட்டுள்ளது.
மேற்கு மெக்சிக்கோவில் இரவு குடிப்பதற்காக கண்ணாடிக் குவளையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை காலையில் வெளியில் ஊற்ற முயன்றபோது 22 வயதான யோசி மல்டொனால்டொ என்பவர் அதற்குள் வித்தியாசமான ஜந்து ஒன்று இறந்து கிடப்பதை அவதானித்தார்.
கூர்ந்து பார்த்தபோது அது அச்சு அசலில் தேவதை போலவே இருந்தது. அச்செய்தி காட்டுத்தீயாய் பரவ, அவரின் வீட்டில் பார்வையாளர் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தற்பொழுது பார்வையாளர்களுக்கு நுழைவு ரிக்கெட் அச்சடித்து பண அறவீடும் நடக்கிறது.