பெண்களே கால்முடி சேவ் செய்வது அவசியமா??

தற்போது பல பெண்கள் தமது கால்களில் உள்ள உறோமங்களை சேவ் செய்வதை ஸ்டைலாக நினைக்கிறார்கள்.


வீற் போன்ற கிறீம்களை பயன்படுத்தியும், ரேசர்கள் மூலமும் நாளாந்தம் தமது கால் முடிகளை சேவ் செய்து மைக்றோ ஸ்கேர்ட் அணிந்து சேவிங் பண்ணிய கால்களை காட்டிக்கொண்டு திரிவதை பேஷனாக நினைக்கும் ஓர் சமூகம் உருவாகி வருகிறது.

இந் நிலையில் சமூக தன்னார்வ நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆராட்சி மூலம் இவ்வாறு சேவிங்குக்காககாக செலவிடப்படும் தண்ணீர் ஆண்டுக்கு 50 பில்லியன் லீற்றர்கள் என தெரிய வந்துள்ளது.

இது உலக குடிநீர் தேவையை ஒரு வாரத்துக்கு தீர்க்க போதுமான அளவாகும்.

உலகமே தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்நிலையில் இவ்வாறான ஆடம்பர விரையம் தேவைதானா என குறிப்பிட்ட நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் கேள்வி எழுப்பியுள்ளது.