வேடுவர் ஒருவர் நடத்திய தாக்குதலில் வைத்தியசாலை பாதுகாவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி பொதுவைத்தியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரை பார்வையிட அனுமதிக்காமையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர், நோயாளியை பார்வையிட அனுமதிக்கவில்லை எனவும், இதனால் ஆத்திரமுற்ற வேடுவேர் அம்பை எய்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலiயில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வேடுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
சமூகத்தில் வேடுவர்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும் என அண்மையில் அறிவித்திருந்தார்.