-சில்லறைக் காசுக்கு கார் வாங்கிய மனிதன்-

சீன மா வியாபாரி ஒருவர் சில்லறைக் காசுகளைப் பயன்படுத்தி கார் ஒன்றை கொள்முதல் செய்துள்ளார்.
வாங் எனும் இவ் சீன வியாபாரி ஆகஸ்ட் 1 இல் கார் வாங்குவதற்காக சாங்ஸ்சி மாகாணத்தில் உள்ள அன்யங் நகரத்தில் ஓர் கார் காட்சியறைக்கு நண்பியின் காரில் வந்தார்.www.tamilamazing.com

வந்தவர் திடு திடுவென காரில் இருந்து 300 கிலோகிராம் நிறையுள்ள 7 சாக்குப் பைகளை கீழே இறக்கினார். இந்த வினோத செயற்பாட்டை கண்ட கார் காட்சியறை ஊழியர் ஒருவர் விசாரித்த போது தான் அவர் 60000 யுவான் ($9600) பெறுமதியான சில்லறை நாணயங்களை வைத்திருப்பதாகவும், அதனைப்பயன்படுத்தி கார் வாங்கப்போவதகவும் தெரிவித்தார்.

மிரண்டுபோன காட்சியறை உரிமையாளர் முதலில் தயங்கினாலும், காசை எண்ணி முடித்ததும் தான் காரை கொண்டு செல்லலாம் எனும் நிபந்தனையோடு சம்மதித்தார்.