Toyota வின் பாதுகாப்புக்கான தொழில்நுட்பம்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இக்காலகட்டத்தில் இக் கண்டுபிடிப்பு அவசியமானதொன்றாகும்.
யப்பானிய முன்னனி கார் தயாரிப்பு நிறுவனமான toyota தனது வாடிக்கையாளர்களை சாலை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் முகமாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஓட்டுனரின் கவனயீனம் மற்றும் உடல்நிலைக்கோளாறு தொடர்பில் ஏற்படும் விபத்துக்களை குறைக்கமுடியுமென நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



முன், பின் மற்றும் பக்கவாட்டில் கமெராக்கள், millimeter-wave தொழில்நுட்பத்தில் இயங்கும் ராடர் கருவி என்பவற்றின் உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இத் தொழில் நுட்பம் காரின் சில்லுகள், steering என்பவற்றின் இயக்கத்தை கட்டுப்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

காரின் குறுக்கே யாராவது திடீரென வரும்போது, அல்லது வேறு வாகனத்துடன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதும் தருவாயில் இத் தொழில்நுட்பம் steering இன் திசையை பொருத்தமாக மாற்றுவதோடு சில்லின் இயக்கத்தையும் கட்டுக்குள் கொண்டுவரும்.

அத்தோடு உள்ளக அவதானிப்பான்கள் மூலம் ஓட்டுனர் திடீரென மாரடைப்பு போன்ற நோய்களின் தாக்கத்துக்கு உள்ளாகும் போது வகனத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்தி ஓட்டுனரை காப்பாற்ற தேவையான யுக்திகளை கையாள்கிறது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இக்காலகட்டத்தில் இக் கண்டுபிடிப்பு அவசியமானதொன்றாகும்.