1980 இல் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய விண்கல்லின் சாதனையை இக்கல் முறியடித்துள்ளது.
இக் கல் சுமார் 2.2 மீற்றர் நீளமும் 1.2 மீற்றர் அகலமும் 1.25 மீற்றர் உயரமும் கொண்டமைந்துள்ளது.
அண்ணளவாக 25401 கிலோகிராம் அதாவது 25 தொன் நிறையுடையதாகக் காணப்படும் இக் கல் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட அதிக நிறை கொண்ட கல் என விண்கல் ஆராட்சி நிபுணரான Zhang என்பவர் China Daily ஊடகத்துக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் Zhang தெரிவிக்கையில் ஒரு வருடத்துக்கு முன்னர் இதே வகையை சேர்ந்த 1 கிலோ கிராம் கல்லை இதே பிரதேசத்துக்கு அண்மையில் தான் கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.