உடலுக்குள் உடல் முளைக்கும் அதிசயம்...!!!

ஈருடல் ஓருயிர் என கவிதைகளில் வர்ணித்து கேள்விப்பட்டுள்ளோம். அது நிஜத்தில் நடக்குமா?? நடந்துவிட்டது...!!! நம்பமுடியவில்லையா?? கீழே படியுங்கள்...


சீனாவை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு அவள் உடலில் இருந்து இன்னுமோர் உடல் வெளிவரத்தொடங்கியுள்ளது.

ஆரம்பத்தில் முதுகில் சிறு கட்டு போல தோன்றியதை பெற்றோர் பெரிது பண்ணாமல் விட்டுவிட்டனர். தற்பொழுது அக்கட்டிலே நெஞ்சுப்பகுதியும், கைகளும் வெளித்தோன்றத் தொடங்கியுள்ளன.

மருத்துவமனையில் சேர்த்தபோது, அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அடுத்து கால்கள் வெளித்தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இவ் மறு உடல் தோற்றத்தால் சிறுமியின் உடல் போசாக்கு வீணடிக்கப்படுவதால் அவள் உடல்நிலை மிக மோசமாக காணப்படுகிறது.

மேலதிக உடலை அப்புறப்படுத்த மேற்கொள்ள வேண்டிய அறுவைச் சிகிச்சைக்கு பெருமளவில் பணச்செலவு எற்படுமென்பதால் பெற்றோர் செய்வதறியாது தடுமாறுகிறார்கள்.