தாயை பிணமாக நடிக்கவைத்து பிச்சையெடுத்த தனயன்??

பெத்த மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு என்று சொல்லுவதை சீனாவில் நடைபெற்ற ஓர் சம்பவம் நிஜமாக்கியுள்ளது.


சீனாவின் சங்காய் மாகாணத்தில் ஓர் தெரு ஓரத்தில் தனது வயோதிப தாயை இறந்துவிட்டார் எனக்கூறி பிணம்போல படுக்கவைத்து, தாயின் உடலின் முன் மண்டியிட்டு அழுது பாசாங்கு செய்து பிச்சையெடுத்துள்ளார் ஓர் இளைஞர்.

தாயை நடிக்கவைத்திருப்பது சிறிதுநேரத்தில் அம்பலமானதால், அங்கிருந்தவர்கள் அவனை நன்றாக நையப்புடைத்து, வயோதிபத்தாயை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.