பூமியில் பொட்டு வைரமே மலை விலைக்கு இருக்கையிலே, ஓர் கிரகம் முழுவதுமே வைரம் என்றால் சும்மாவா!!!
இந்த தகவலை மான்செஸ்டர் பல்கலைக்கழக வானியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர் செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
பூமியில் இருந்து 4000 ஒளியாண்டு தூரத்தில் காணப்படும் இக்கிரகம், இறந்த நட்சத்திரத்தின் மிகுதியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த கிரகத்தின் அடர்த்தி, காபன் அடர்த்தி என்பவை வைரத்தை போல் இருப்பதாக ஆராட்சி முடிவுகள் உறுதிப்படுத்தின.